தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும்.(அல்குர்ஆன் 18:1) !

Wednesday, June 8, 2011

                                               இறைவனின் திருபெயரால்.....

அஸ்ஸலாமு அலைக்கும்


எனக்கும் எழுதுகோல்களை கற்றுகொடுத்த அந்த ஏகஇறைவனுக்கு என் முதற்கண் நன்றியை தெரிவித்தவனாக....

எனக்கு இந்த வலைஉலகினை அறிமுகம் செய்து வைத்த அனைத்து சகோதரர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

வலையுலகில் புதிதாய் நுழைந்த தருனம், இஸ்லாத்திற்க்கு எதிராகவும்,திருக்குர் ஆனுக்கு எதிராகவும் , முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகவும் பொய்யான பல்வேறு விதமான நச்சுக்கருத்துகள், அவதூறுகள்,பொய்கள்...என் மனதை படபடக்க வைத்தது, என்னையும் சில நாட்கள் அது உண்மையாக இருக்குமோ?!!! என்று என் ஈமானை சிறிதுகாலம் அசைத்து பார்த்த அந்த நாட்களை என்னால் இன்னும் மறக்க இயலாது.

அந்நாட்களில் நான் இறைவனிடம் பிரார்த்தித்த ஒரே பிரார்த்தனை " என் இறைவா! உன் தூய்மையான மார்க்கத்தில் இருந்து என் மனதை தடம் புரல வைத்துவிடாதே!" என்பதுதான், அன்றுவரை பெயரலவில் முஸ்லிமாக இருந்த நான், அன்று முதல் இஸ்லாத்தினை முழுமையாக அறிந்திட வேண்டும் என்ற அவாவில் திருக்குர்ஆனை படிக்க தொடங்கினேன், நபியின் வரலாற்றை வாசிக்க தொடங்கினேன், மனதில் நிரம்ப சந்தேகங்கள்!! கேள்விகள்??? அதற்கான விடயங்களை தேட ஆரம்பித்தேன், நம் சகோதரர்களின் தளங்கள் எனக்கு மிகவும் உதவின, அவர்களின் அழகான தெளிவான பதில்களை கண்டு என் மனம் கலங்கிய நாட்கள் இன்னும் என் நினைவில்........மலர்கிறது.

 நான் இஸ்லாத்தினை தேடத்தொடங்கிய பின் என் 25 ஆண்டுகால வாழ்வில் நான் அதுவரை கேள்விப்படாத பல்வேறு விசயங்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. குர்ஆன் ஒரு புத்தகமாகவே என் கையில் பல ஆண்டுகள் இருந்ததே தவிர அதை படித்து புரிந்து கொள்ளவேண்டும் என்று, என்றும் என் மனது நினைத்தது இல்லை.(பெரும்பான்மையான முஸ்லிம்க்ள் அப்படிதான் இருக்கிறார்கள்)

குர்ஆனை படித்தேன், ஆடியொவாக கேட்டேன் லயித்து பொய்விட்டேன் இவ்வளவு ஆழமான கருத்துகளா? இவ்வளவு நாள் அல்லாஹ்வின் வேதத்தை சுமந்த ஒரு கழுதையாக இருந்துவிட்டோமே என்ற ஒரு முள் என் நெஞ்சை தைத்தது.

ஒரு அத்தியாயத்தினை தினமும் நீங்கள் கேட்டுபாருங்கள் அது தினமும் புது புது அர்த்தம் சொல்லும்- நிச்சயம் குர் ஆனை வசிக்க தொடங்கிய ஒவ்வொரு வரும் வாசிக்கும் ஒவ்வொருவரும் இதை நங்கு உணர்வார்கள்.

இஸ்லாத்திற்க்கு எதிராக இஸ்லாமிய நலவிரும்பிகள்(எதிரிகள்) செய்யும் முகமுக்கியமான பிரச்சாரம் குர் ஆனில் பல முரண்பாடுகள் இருக்கின்றன என்பதுதான்..........

உலக வேதங்களிலேயே தன்னிடம் ஒரு முடண்பாடும் இல்லை என்று சொல்லும் ஒரே வேதம் குர்ஆன் மட்டும்தான்..........

மேலும் இதைபோன்று ஒரு அத்தியாயததையாவது கொண்டுவாருங்கள் என்று 14 நூற்றாண்டுகளாக அரைகூவல் விடும் ஒரே வேதமும் குர்ஆன் மட்டும்தான்........

அப்படி என்றால் எதைத்தான் முரண்பாடு என்று இந்த நலவிரும்பிகள் கூறுகிறார்கள் என்று ஆராய்வதற்கே இந்த வலைதளம்.

என்னுடைய இந்த பணி தடை இன்றி அமைய வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்ய என் அன்பு சகோதரர்களை கேட்டுக்கொள்கிறேன்.

மஸலாமா....

அன்புடன்,

காதர் மைதீன்.